Mr. Kothanda Raman

    நமஸ்காரம். அது என்னுடைய பெண்ணின் திருமணம் குறித்து நான் வருந்திக்கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு தகப்பனுக்கே உரிய கவலையும் பயமும் என்னை ஆட்கொள்ள நான் செய்வதறியாது மிகவும் பிரபலமான ஒரு ஜோதிடரை அணுகினேன். அவருடைய ‘இந்தப் பெண்ணுக்குப் பிடித்த இடத்தில் திருமணம் செய்தால் நன்றாக இருக்க மாட்டாள் ‘ என்ற வார்த்தை என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. என்னுடையப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத அந்த இறுக்கமான தருணத்தில் பிரச்சினையைத் தள்ளி விடுவதிலேயே நான் குறியாக இருந்தேன். இதனால் என் சிரமம் கூடியதே தவிர குறையவில்லை.

 என் பெண்ணின் மன வருத்தம் ஒருபுறமும், கிரஹங்களின் செயல்பாடுகள் என்ன விளைவை உண்டாக்குமோ என்ற பீதி மறுபுறமுமாக என்னை அலைக்கழித்தன. யாரிடம் போய் நிற்பது எனத் தெரியவில்லை.

  மீண்டும் மற்றுமொரு பிரபலமான ஜோதிடரை அணுக முயற்சித்தேன். என்னுடைய கிரஹசாரமோ என்னவோ அவரிடம் பேசுவதற்கோ, ஆலோசனைப் பெறுவதற்கோ முடியவேயில்லை. இத்தருணத்தில் என் மனைவியுடன் பேசுவதையும் மகளைப் பார்ப்பதையும் கூடத் தவிர்த்தேன். என் வேலைப் பளுவில் என்னை மூழ்கடித்துக் கொண்டு இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியாத சங்கடத்தில் ஆழ்ந்தேன்.

     என் சத்குருநாதர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ யோகிராம்சுரத்குமார் அருளால் என்னுடைய குருவும் என் குடும்பத்தில் மிக மூத்தவருமான ஸ்ரீ பாலகுமாரனும் அவருடைய துணைவியார் திருமதி.சாந்தாம்மாவும் என்னைத் திரு.சுந்தர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். சரியாக ஒரு வருடம் முன்பு ஒரு நாள் என் தாயாரின் ச்ரார்த்தம் முடித்த கையோடு நாள், நட்சத்திரம், நல்ல நேரம் எதுவும் பார்க்காமல் நேரே திரு.சுந்தர் அவரை சந்திக்கச் சென்றேன்.

   அவரைப் பார்த்தவுடனேயே என்னுடைய எல்லப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நம்பிக்கையை அவர் உட்கார்ந்திருந்த இடத்தின் சூழலும் அவருடைய கனிவான வரவேற்பும் எனக்களித்தன. அவருக்குப் பின்னால் இருந்த மஹா ஸ்வாமிகளின் படமும், வடுவூர் கோதண்டராம ஸ்வாமி படமும் அதை மேலும் உறுதிப்படுத்தின. என்னைக் குறித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்ட பின் என் மகள் திருமணம் குறித்த விவரங்களையும் என் மனக் குழப்பங்களையும் அழுகையும் கேவலுமாக அவரிடம் எடுத்துரைத்தேன். அவர் நிதானமாகக் கேட்டு விட்டு, ‘ நீங்கள் எதற்கும் வருத்தப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகும் ‘ என்று சொல்லிவிட்டு உடனடியாக என் மகளின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜாதகம் கணித்து என்னிடம் அதன் விபரங்களை விளக்கினார். ‘நீங்கள் ஒரு முறை குடும்பத்துடன் ஸ்ரீவாஞ்சியம் கோயிலுக்குப் போய் அங்கிருக்கும் சிவனுக்கு ஒரு ருத்ராபிஷேகம் செய்து விட்டு வாருங்கள்; நிச்சயமாக இந்த விஷயம் நல்லபடியாக முடியும்’ என்று அவர் கூறிய வார்த்தைகள், அவருடைய ஆணித்தரமான கணக்கிடல், அவர் உபாசிக்கும் அம்பாளின் கருணை ஆகியவை எனக்கு மிகுந்த மனத் தெளிவைக் கொடுத்தது.

    அவர் சொன்னபடி ஸ்ரீவாஞ்சியம் சென்று ஹோமங்களும் அபிஷேகமும் முடித்துத் திரும்பினேன். இதில் வேண்டா வெறுப்பாக, கொஞ்சம் அவநம்பிக்கையுடன் என் குடும்பமும் கலந்து கொண்டது. திரும்பி வந்த கொஞ்ச நாட்களில் என் மகளுக்குப் பிடித்த மாப்பிள்ளையையும் அவரது குடும்பத்தாரையும் நேரில் சந்தித்தேன்.   

    என்னை வழிநடத்திச் செல்ல யாருமே இல்லையே என நான் ஏங்கித் தவிக்கையில் ‘நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம். உங்கள் சத்குருநாதர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ யோகிராம்சுரத்குமாரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளும் உங்களுக்குத் துணையிருந்து வழி நடத்துவார்கள்’ என்ற திரு.சுந்தரின் வார்த்தைகள் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தின. ஏதோ இவரது சொல்லுக்குக் காத்திருந்தது போல ஏற்பாடுகள் நிகழத் தொடங்கின.

   அவர் கூறிய வண்னமே ஸ்ரீமான் அறுசுவை நடராஜய்யரும் அவரது குடும்பம் மொத்தமும் எங்களுடன் கைக் கோர்த்து திருமணத்தை விமரிசையாக நடத்திக் கொடுத்தனர். திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய திரு.சுந்தருக்கு நான் கண்கள் பனிக்க நன்றி கூறினேன். இதோ இப்போது என் மகளும் மாப்பிள்ளையும் சிறப்பாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

  ஒரு நல்ல ஜோதிடர் என்பவர் வெறும் கணக்குகள் போட்டோ, ஜாதகக் கட்டங்களைப் பார்த்தோ, கிரஹங்களின் தன்மையை ஆராய்ந்தோ சொல்பவற்றில் பத்துக்கு ஆறு நடக்கும் பட்சத்தில் தன்னைப் பற்றிப் பெருமைப் பட்டுக் கொள்பவர் அல்ல. தன்னை நம்பி வருபவரிடம் நல்ல இதமான வார்த்தைகள் கூறி, அவருக்காக தான் நம்பும் இறைவனை நோக்கி தன்னலம் இல்லாமல் பிரார்த்தித்து, அவருடைய வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என உண்மையாகவே விழையும் பட்சத்தில் அந்த ஜோதிடரின் சொல் பலிக்கும். எனக்கும் அப்படி திரு.சுந்தரின் சொல் பலித்தது. எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலைக் கொடுத்தது. அவருக்கு என் நன்றிகளை இத்தருணத்தில் மீண்டும் சமர்ப்பிக்கிறேன். என் சத்குருநாதர்கள் அவருக்கு என்றும் துணை நிற்கப் பிராத்திக்கிறேன்.

நன்றி.

  

Mr. Kothanda Raman.

Senior Principal,

The Velammal International School.

Appointment Bookings

Please note that official appointments and enquiries regarding the same are made only through WhatsApp messages.

Consultation Timings

Monday - Saturday
10.00am to 1.00pm
4.00pm to 7.00pm